செங்காந்தள் கலைச்சமர் 2025

நேற்றைய தினம் நடைபெற்ற செங்காந்தள் கலைச்சமர் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தமிழர் கலை கல்வி நடுவம் ஐக்கிய இராச்சியத்தினால் நடாத்தப்பட்ட முதல் நிகழ்வாகும். Read More….

புகைப்படங்கள்…..

செங்காந்தள் கலைச்சமர் 2025

நேற்றைய தினம் நடைபெற்ற செங்காந்தள் கலைச்சமர் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தமிழர் கலை கல்வி நடுவம் ஐக்கிய இராச்சியத்தினால் நடாத்தப்பட்ட முதல் நிகழ்வாகும். இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்துப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் , பல்வேறு இடங்களில் இருந்து நிகழ்விற்குவருகைதந்து சிறப்பித்த நடுவர்கள் அனைவருக்கும் நடுவம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்நிகழ்வினைத் தலைமை தாங்கி சிறப்பாக நடாத்திய அனைத்து இளையோர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். நடுவத்தோடு இணைந்து பயணிக்கின்ற பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வருகைதந்து நிகழ்வினைச் சிறப்பாக நடாத்த உதவிய அனைவருக்கும் நன்றி கூறுவதோடு இந்நிகழ்வினைச் சிறப்பாக ஒழுங்கமைத்த கலைபண்பாட்டுப் பிரிவு, நிகழ்வுப்பிரிவு, இளையோர் பிரிவு, நிவர்வாகம், இயக்குநர்கள், காப்பாளர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்றோம்.

தமிழர் கலை கல்வி நடுவத்தின் முதலாவது அமர்வு கறோவில் சிறப்பாக நடைபெற்றது

கறோவில், செப்டம்பர் 14 — தமிழர் கலை கல்வி நடுவத்தின் முதலாவது அமர்வு செப்டம்பர் 14ஆம் தேதி கறோ பகுதியில் நடைபெற்றது. நிகழ்வில் பல தமிழ்ப் பள்ளி நிர்வாகிகளும், இளையோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். Read More….

தமிழர் கலை கல்வி நடுவத்தின் முதலாவது அமர்வு கறோவில் சிறப்பாக நடைபெற்றது

கறோவில், செப்டம்பர் 14 — தமிழர் கலை கல்வி நடுவத்தின் முதலாவது அமர்வு செப்டம்பர் 14ஆம் தேதி கறோ பகுதியில் நடைபெற்றது. நிகழ்வில் பல தமிழ்ப் பள்ளி நிர்வாகிகளும், இளையோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அமர்வில் யாப்பின் நடைமுறைப்படுத்தல், நூலாக்கம், சமூக வலைத்தளங்களின் பயன்கள், புதிய கல்வியாண்டிற்கான வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட முக்கியமான தலைப்புகள் குறித்து ஆழமான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.

தேசியக் கொடியேற்றத்துடன் துவங்கிய இந்நிகழ்வில், தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழர் கலை கல்வி நடுவம், எதிர்காலத்தில் கல்வி மற்றும் கலை பண்பாட்டுத் துறைகளில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து செல்லத் திட்டமிட்டுள்ளது.